நீங்கள் பின்தொடரும் வலைப்பதிவுகளை நிர்வகித்தல்

உங்கள் Blogger டாஷ்போர்டில் படிக்கும் பட்டியலில் உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளைச் சேர்ப்பதன் மூலம் அவற்றில் சமீபத்திய இடுகைகளைப் படிக்கலாம்.

வலைப்பதிவைப் பின்தொடர்தல்

’பின்தொடர்பவர்கள்’ கேட்ஜெட்டைப் பயன்படுத்தும்போது, வலைப்பதிவைப் பின்தொடர்பவராக உங்கள் பெயர், சுயவிவரப் படம் உள்ளிட்ட உங்கள் Google சுயவிவரம் பொதுவில் காட்டப்படும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google சுயவிவரத்தை மாற்றலாம். அடையாளமற்ற முறையில் வலைப்பதிவைப் பின்தொடர, Blogger டாஷ்போர்டு அல்லது அமைப்புகள் மெனுவிலிருந்து அதைப் பின்தொடரவும்.

வலைப்பதிவைப் பின்தொடர்பவர்களின் கேட்ஜெட்டிலிருந்து

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. பின்தொடர விரும்பும் வலைப்பதிவில் ’பின்தொடர்பவர்கள்’ கேட்ஜெட்டைத் தேடவும்.
  3. பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தோன்றும் சாளரத்தில் பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Blogger டாஷ்போர்டிலிருந்து
  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் படிக்கும் பட்டியல் Bookmark என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்திலுள்ள படிக்கும் பட்டியலை நிர்வகி திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் பின்தொடர விரும்பும் வலைப்பதிவின் URLலை உள்ளிடவும்.
  6. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. பொதுவிலோ அடையாளமற்ற முறையிலோ தொடர்வதைத் தேர்வுசெய்யவும்.
  8. பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைப்பதிவைப் பின்தொடர்வதை நிறுத்துதல்

உங்கள் Blogger டாஷ்போர்டிலிருந்து
  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் படிக்கும் பட்டியல் Bookmark என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் வலதுபுறத்திலுள்ள திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் அகற்ற விரும்பும் வலைப்பதிவுக்கு அடுத்துள்ள நீக்கு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
வலைப்பதிவைப் பின்தொடர்பவர்களின் கேட்ஜெட்டிலிருந்து
  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. நீங்கள் இனிமேல் பின்பற்ற விரும்பாத வலைப்பதிவில் ’பின்தொடர்பவர்கள்’ கேட்ஜெட்டைத் தேடவும்.
  3. பின்தொடர்வதை நிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தோன்றும் சாளரத்தில் பின்தொடர்வதை நிறுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வலைப்பதிவை வாசகர்கள் பின்தொடர அனுமதித்தல்

பிறர் உங்கள் வலைப்பதிவைப் பின்தொடர்வதை அனுமதிக்க, 'பின்தொடர்பவர்கள்' கேட்ஜெட்டைச் சேர்க்கவும்:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே இடதுபுறத்திலுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. புதுப்பிக்க வேண்டிய வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  4. இடதுபுற மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ’பின்தொடர்பவர்கள்’ கேட்ஜெட்டைச் சேர்க்க விரும்பும் இடத்தைத் தேர்வுசெய்யவும்.
  6. கேட்ஜெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. திறக்கும் சாளரத்தில் மேலும் கேட்ஜெட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. "பின்தொடர்பவர்கள்" என்பதைத் தேடி, சேர் Add என்பதைக் கிளிக் செய்யவும்.
  9. உங்கள் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.
  10. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  11. மாற்றத்தைச் சேமிக்க, கீழே வலதுபுறத்திலுள்ள சேமி Save என்பதைக் கிளிக் செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பொதுவில் நான் ஒரு வலைப்பதிவைப் பின்தொடரும்போது எந்தச் சுயவிவரம் பயன்படுத்தப்படும்?

நீங்கள் பொதுவில் பின்தொடரும் வலைப்பதிவில் உங்கள் Google சுயவிவரம் காட்டப்படும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google சுயவிவரத்தை மாற்றலாம்.

நினைவில்கொள்ளவும்:

  • உங்கள் Blogger/பிற சுயவிவரத்தைப் பயன்படுத்தி அடையாளமற்ற முறையில் வலைப்பதிவைப் பின்தொடர்கிறீர்கள் எனில், பொதுவில் அதைப் பின்தொடரத் தீர்மானித்தால் உங்கள் Google சுயவிவரம் காட்டப்படும், உங்கள் Blogger/பிற சுயவிவரம் காண்பிக்கப்படாது.
  • உங்கள் Blogger/பிற சுயவிவரத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே பின்தொடரும் வலைப்பதிவுகள், நீங்கள் அவற்றைப் பின்தொடரத் தொடங்கியபோது பயன்படுத்திய சுயவிவரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்.

எனது வலைப்பதிவைப் பின்தொடர்பவர்களை எப்படித் தடுப்பது?

யாரேனும் உங்களைப் பின்தொடர்வதிலிருந்து தடுக்க:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உங்கள் வலைப்பதிவின் பெயருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. மாற்றங்களைச் செய்ய விரும்பும் வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  4. இடதுபுற மெனுவில் புள்ளிவிவரம் Statistics என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மேலே “பின்தொடர்பவர்கள்" என்பதற்கு அடுத்துள்ள எண்ணைக் கிளிக் செய்யவும்.
  6. நீங்கள் தடுக்க விரும்பும் பின்தொடர்பவரைக் கண்டறிந்து தடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தடுக்கப்பட்ட பின்தொடர்பவர்கள் இனி நீங்கள் வலைப்பதிவில் இடுகையிடும்போது அறிவிப்புகளைப் பெறமாட்டார்கள்.

குறிப்பு: உங்கள் வலைப்பதிவைப் பின்தொடர்வதிலிருந்து ஒருவரைத் தடுத்திருந்தாலும் அவர்கள் வலைப்பதிவின் URLலுக்குச் சென்று உங்கள் வலைப்பதிவைப் படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4101382533227311002
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false