வலைப்பதிவின் அமைப்புகளை நிர்வகித்தல்

இணையத்தில் Bloggerரைப் பயன்படுத்தும்போது உங்கள் வலைப்பதிவின் அமைப்புகளை நிர்வகிக்கலாம். வெவ்வேறு வகையான வலைப்பதிவு அமைப்புகள், வலைப்பதிவை எப்படிப் பிரத்தியேகப்படுத்தலாம் ஆகியவை குறித்த தகவல்களைக் கீழுள்ள உள்ளடக்கம் வழங்குகிறது.

அடிப்படை

தலைப்பு

உங்கள் வலைப்பதிவின் தலைப்பு.

விளக்கம்

உங்கள் வலைப்பதிவின் விளக்கம்.

வலைப்பதிவு மொழி

உங்கள் வலைப்பதிவின் மொழி.

வயதுவந்தோர் உள்ளடக்கம்

நிர்வாணம் அல்லது பாலியல் ரீதியான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட வயதுவந்தோர் உள்ளடக்கம் உங்கள் வலைப்பதிவின் உள்ளடக்கத்தில் இருப்பதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டும். தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் வலைப்பதிவின் பார்வையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி காட்டப்படும், மேலும் உங்கள் வலைப்பதிவில் தொடர விரும்புவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களிடம் கேட்கப்படும்.

Google Analytics உடைமை ஐடி

உங்கள் தளத்திற்கு வருபவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று பார்க்க, உங்கள் வலைப்பதிவில் Google Analyticsஸை ஒருங்கிணைக்கவும். உங்கள் வலைப்பதிவைக் கண்காணிக்க, உங்கள் Google Analytics வலை உடைமை ஐடியை (எடுத்துக்காட்டாக <code;ua-123456-1< code="">) சேர்க்கவும். டைனமிக் காட்சிகளுக்கும் தளவமைப்புத் தீம்களுக்கும் மட்டுமே இந்த அமைப்பு பொருந்தும். உங்கள் வலைப்பதிவில் கிளாசிக் தீமைப் பயன்படுத்தினால் உங்கள் வழக்கமான தீமில் நீங்களே இதைச் சேர்க்க வேண்டும்.</code;ua-123456-1<>

ஃபெவிகான்

பிரத்தியேக ஃபெவிகானைப் பதிவேற்றுதல்.

தனியுரிமை

Bloggerரில் பட்டியலிடப்படும்

Blogger.com அல்லது பிற வலைப்பதிவுகளிலிருந்து உங்கள் வலைப்பதிவுக்கு இணைப்பை வழங்க மற்றவர்களை அனுமதிக்கும்.

தேடல் இன்ஜின்களால் கண்டறிய முடியும்

உங்கள் வலைப்பதிவைக் கண்டறிய தேடல் இன்ஜின்களை அனுமதிக்கும்.

வெளியிடுதல்

வலைப்பதிவு முகவரி

வலைப்பதிவு முகவரியையோ URLலையோ தேர்வுசெய்யவும்.

முக்கியம்: தேர்ந்தெடுத்த துணை டொமைன் கிடைக்க வேண்டும்.

பிரத்தியேக டொமைன்

நீங்கள் சொந்தமாகப் பதிவுசெய்த URLலை உங்கள் வலைப்பதிவில் அமைக்கவும். முன்னொட்டு இல்லாத டொமைன்களில் (எ.கா: yourdomain.com) வலைப்பதிவுகளை ஹோஸ்ட் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அவற்றில் ஒரு முதல்நிலை டொமைனோ (www.yourdomain.com) துணை டொமைனோ (blog.yourdomain.com) இருக்க வேண்டும். முதலில் உங்கள் டொமைனை முறையாகப் பதிவுசெய்ய வேண்டும்.

  • டொமைனைத் திசைதிருப்புதல்
    இந்த விருப்பம் ’முன்ஒட்டு இல்லாத’ டொமைனிலிருந்து பிரத்தியேக டொமைனிற்கு ஒரு திசைதிருப்புதலை அனுமதிக்கும் (எடுத்துக்காட்டாக "example.com" என்பதிலிருந்து "www.example.com" என்பதற்குத் திசைதிருப்புதல்).
  • ஃபால்பேக் துணை டொமைன்
    உங்கள் வலைப்பதிவுடன் பிரத்தியேக டொமைனை இணைப்பதற்கு CNAMEமைப் பயன்படுத்தலாம். CNAMEமை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.

HTTPS

HTTPS கிடைக்கும்நிலை

Blogspot முகவரிகள் எப்போதும் HTTPSஸாக உள்ளதால் தனிப்பயன் டொமைன்களுக்கு மட்டுமே இந்த அமைப்பு கிடைக்கும். HTTPS திசைதிருப்புதல் இயக்கப்பட்டால்:

  • உங்கள் வலைப்பதிவிற்கான வருகையாளர்கள் எப்போதும் https://<your-blog>.blogspot.com தளத்திற்குச் செல்வார்கள்.

HTTPS திசைதிருப்புதல் முடக்கப்பட்டால்:

  • http://<your-blog>.blogspot.com தளத்திற்கான வருகையாளர்களுக்கு என்க்ரிப்ஷன் செய்யப்படாத இணைப்பான HTTP வழியாகச் சேவையளிக்கப்படும்.

  • https://<your-blog>.blogspot.com தளத்திற்கான வருகையாளர்களுக்கு என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இணைப்பான HTTPS வழியாகச் சேவையளிக்கப்படும். உங்கள் வலைப்பதிவிற்கான HTTPS குறித்து மேலும் அறிக.

HTTPS திசைதிருப்புதல்

HTTPS திசைதிருப்புதலை இயக்கும்போது வருகையாளர்கள் எப்போதும் https://<your-blog>.blogspot.com தளத்தில் பாதுகாப்பான பதிப்பிற்குச் செல்வார்கள்.

அனுமதிகள்

வலைப்பதிவு நிர்வாகிகள் & இடுகையாளர்கள்

வலைப்பதிவின் நிர்வாகிகள், இடுகையாளர்கள் ஆகியோரின் பட்டியலைக் காட்டும். நீங்கள் அவர்களின் மெம்பர்ஷிப்பை இங்கு மாற்றவும்/ரத்துசெய்யவும் முடியும்.

நிலுவையிலுள்ள இடுகையாளர் அழைப்புகள்

இடுகையாளராவதற்கான உங்கள் அழைப்பை இன்னும் ஏற்காத பயனர்களைக் காட்டும்.

மேலும் பல இடுகையாளர்களை அழைத்தல்

வலைப்பதிவு இடுகையாளரைச் சேர்க்க, நீங்கள் சேர்க்க விரும்புபவரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அழைப்பை அவர் ஏற்றதும் இடுகையாளராகப் பட்டியலிடப்படுவார். உங்கள் வலைப்பதிவில் அதிகபட்சம் 100 உறுப்பினர்களை (இடுகையாளர்கள், நிர்வாகிகள் அல்லது வாசகர்கள்) சேர்க்கலாம்.
முக்கியம்: வலைப்பதிவுகளை நிர்வகிக்கவும் இடுகையிடவும் Google கணக்கு தேவை.

வாசகர் அணுகல்

இயல்பாக உங்கள் வலைப்பதிவு பொதுவில் இருக்கும், ஆன்லைனில் உள்ள எவரும் அதைப் படிக்கலாம். உங்கள் வலைப்பதிவைப் பார்க்கக்கூடியவர்களை வரம்பிட, “வாசகர் அணுகல்” பிரிவில் பொது, இடுகையாளர்களுக்கெனப் பிரத்தியேகமானது அல்லது படிக்க அனுமதியுள்ள பிரத்தியேக வாசகர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படிக்க அனுமதியுள்ள பிரத்தியேக வாசகர்கள்

வலைப்பதிவின் வாசகர்களின் பட்டியலைக் காட்டும்.

படிக்க அனுமதியுள்ள பிரத்தியேக வாசகருக்கான நிலுவையிலுள்ள அழைப்புகள்

வாசகராவதற்கான உங்கள் அழைப்பை இன்னும் ஏற்காத பயனர்களைக் காட்டும்.

மேலும் பல வாசகர்களை அழைத்தல்

உங்கள் வலைப்பதிவைப் படிக்க வேண்டுமென நீங்கள் விரும்புபவரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

இடுகைகள்

முதன்மைப் பக்கத்தில் காட்டப்படும் அதிகபட்ச இடுகைகள்

நீங்கள் முதன்மைப் பக்கத்தில் காட்ட விரும்பும் இடுகைகளின் அதிகபட்ச அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

இடுகை டெம்ப்ளேட் (விரும்பினால்)

நீங்கள் புதிய இடுகையை உருவாக்கும் ஒவ்வொரு முறையும் தோன்றும் உரையையோ குறியீட்டையோ பயன்படுத்தி இடுகை எடிட்டரை இடுகை டெம்ப்ளேட்கள் வடிவமைக்கின்றன. இடுகை டெம்ப்ளேட்கள் குறித்து மேலும் அறிக.

படத்தின் லைட்பாக்ஸ்

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது உங்கள் வலைப்பதிவின் மேற்பகுதியிலுள்ள மேல் அடுக்கில் கிளிக் செய்தால் உங்கள் படங்கள் திறக்கும். உங்கள் இடுகையில் பல படங்கள் இருந்தால் அவை திரையின் கீழ்ப்புறத்தில் சிறுபடங்களாகத் தோன்றும்.

கருத்துகள்

கருத்தைக் காட்ட வேண்டிய இடம்

  • உட்பொதிக்கப்பட்டது: இடுகையில் பதிலளிக்கப் பயனர்களை அனுமதிக்கும்.
  • முழுப் பக்கம் மற்றும் பாப் அப் சாளரம்: கருத்து தெரிவிப்பதற்காகப் பயனர்களை ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்துச்செல்லும்.

முக்கியம்: "மறை" என்பதைத் தேர்வுசெய்யும்போது அது ஏற்கெனவே இருக்கும் கருத்துகளை நீக்காது. மற்றொரு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அவற்றைக் காண்பிக்க முடியும்.

யாரெல்லாம் கருத்து தெரிவிக்கலாம்?

Bloggerரில் உங்கள் வலைப்பதிவு இடுகைகளில் யாரெல்லாம் கருத்து தெரிவிக்கலாம் என்பதை நீங்கள் நிர்வகிக்க முடியும். "யாரெல்லாம் கருத்து தெரிவிக்கலாம்?" என்பதில் பின்வருபவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

  • அடையாளம் தெரியாத பயனர்கள் உட்பட அனைவரும்
  • Google கணக்குகளைக் கொண்ட பயனர்கள்
  • இந்த வலைப்பதிவின் உறுப்பினர்கள் மட்டும்

கருத்துத் தணிக்கை

கருத்துகளை வெளியிடுவதற்கு முன்னர் அவற்றை மதிப்பாய்வு செய்யவும். கருத்துகளை மதிப்பாய்வு செய்ய ‘கருத்துகள் காட்சிக்குச்’ செல்லவும். கருத்துத் தணிக்கை குறித்து மேலும் அறிக.

  • இதைவிடப் பழைய இடுகைகளுக்கு
    கருத்துத் தணிக்கைப் பிரிவில் "சிலநேரம்" என்பதைத் தேர்ந்தெடுத்திருந்தால் அந்தக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தெரிவிக்கப்படும் கருத்துகள் மட்டுமே தணிக்கைப் பிரிவுக்குள் செல்லும்.
  • இதற்கான மின்னஞ்சல் தணிக்கைக் கோரிக்கைகள்
    உங்கள் வலைப்பதிவில் ஒரு புதிய கருத்தைப் பெறும்போது உங்களுக்கு மின்னஞ்சல் விழிப்பூட்டல் அனுப்பப்படும்.​

வாசகர் கருத்திற்கான கேப்ட்சா

யாராவது உங்கள் வலைப்பதிவில் கருத்து தெரிவிக்க விரும்பினால் சொல் சரிபார்ப்புப் படியை நிறைவுசெய்ய வேண்டும். வேண்டாத கருத்துகளை எப்படித் தடுப்பது என அறிக. கருத்துகளுக்கான சொல் சரிபார்ப்பு வலைப்பதிவு இடுகையாளர்களுக்குக் காண்பிக்கப்படாது.

முக்கியம்: இந்த அமைப்பு முடக்கப்பட்டிருந்தால்கூட இடுகையிடுவதற்கு முன்னர் ஒரு குறியீட்டை உள்ளிடுமாறு கருத்து தெரிவிக்கும் சிலரிடம் கேட்கப்படலாம்.

கருத்துப் படிவச் செய்தி

கருத்துப் பெட்டிக்குக் கீழே இந்தச் செய்தி காட்டப்படும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல் மூலம் இடுகையிடுதல்

மின்னஞ்சல் Mail2Blogger எனவும் அழைக்கப்படும். உங்கள் வலைப்பதிவில் உரையையும் படங்களையும் நேரடியாக இடுகையிட இந்த முகவரியைப் பயன்படுத்தவும்.

கருத்து அறிவிப்பு மின்னஞ்சல்

உங்கள் வலைப்பதிவில் யாராவது கருத்து தெரிவித்தால் இந்த முகவரிகளில் அறிவிப்போம்.

நிலுவையிலுள்ள கருத்து அறிவிப்பு மின்னஞ்சல்கள்

கருத்து அறிவிப்பு மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான உங்கள் அழைப்பை இன்னும் ஏற்காத பயனர்களைக் காட்டும்.

கருத்து அறிவிப்பு மின்னஞ்சல்களைப் பெற மேலும் பலரை அழைத்தல்

காற்புள்ளிகளால் பிரித்து 10 மின்னஞ்சல் முகவரிகள் வரை உள்ளிடலாம்.

இடுகைகளை இவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புதல்

நீங்கள் புதிய இடுகையை வெளியிடும்போதெல்லாம் இந்த முகவரிகளுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

நிலுவையிலுள்ள இடுகை அறிவிப்பு மின்னஞ்சல்கள்

இடுகை அறிவிப்பு மின்னஞ்சல்களைப் பெறுவதற்கான உங்கள் அழைப்பை இன்னும் ஏற்காத பயனர்களைக் காட்டும்.

அறிவிப்புகளை இடுகையிட மேலும் பலரை அழைத்தல்

காற்புள்ளியால் பிரித்து 10 மின்னஞ்சல் முகவரிகள் வரை உள்ளிடலாம்.

வடிவமைத்தல்

நேர மண்டலம்

உங்கள் நேர மண்டலத்தை அமைக்கலாம்.

தேதித் தலைப்பு வடிவமைப்பு

உங்கள் இடுகைகளின் மேல் இந்த வடிவமைப்பில்தான் தேதி தோன்றும்.

நேரமுத்திரை வடிவமைப்பு

இடுகையின் நேரமுத்திரை இந்த வடிவமைப்பில்தான் தோன்றும்.

கருத்தின் நேரமுத்திரை வடிவமைப்பு

கருத்தின் நேரமுத்திரை இந்த வடிவமைப்பில்தான் தோன்றும்.

மேலதிகத் தகவல்கள்

தேடல் குறித்த விளக்கத்தை இயக்குதல்

வலைப்பதிவின் தேடல் குறித்த விளக்கத்தை அமைக்கவும். உங்கள் வலைப்பதிவு எதைப் பற்றியது என்பதைச் சுருக்கமாக எழுதி தேடல் முடிவுகளில் பயனர்கள் உங்கள் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்க உதவவும். வலைப்பதிவு விளக்கங்கள் குறித்து மேலும் அறிக.

பிழைகளும் திசைதிருப்புதல்களும்

பிரத்தியேக 404

வலைப்பதிவின் ’404 பக்கம் இல்லை’ என்ற செய்தியை அமைக்கலாம். பொதுவான செய்திக்குப் பதிலாக ’404 பக்கத்தில்’ காட்டுவதற்கான செய்தியை உள்ளிடவும்.

பிரத்தியேகத் திசைதிருப்புதல்கள்

வலைப்பதிவின் பிரத்தியேகத் திசைதிருப்புதல்களை அமைக்கலாம். உங்கள் வலைப்பதிவின் பக்கங்களைச் சுட்டிக்காட்டும் URLகளுக்கான பிரத்தியேகத் திசைதிருப்புதல்களைச் சேர்க்கவும்.

  • இதிலிருந்து
    நீக்கப்பட்ட URLலைச் சேர்க்கவும். அசல் கட்டுரை நீக்கப்பட்டால் நிரந்தரம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதற்கு
    சுட்டிக்காட்ட விரும்பும் URLலைச் சேர்க்கவும்.

Crawlerகளும் அட்டவணைப்படுத்தலும்

பிரத்தியேக robots.txt அமைப்பை இயக்குதல்

வலைப்பதிவின் பிரத்தியேக robots.txt உள்ளடக்கத்தை அமைக்கலாம். தேடல் இன்ஜின்களில் இயல்பான robots.txt உள்ளடக்கத்திற்குப் பதிலாக இந்த உரை பயன்படுத்தப்படும். robots.txt உள்ளடக்கம் குறித்து மேலும் அறிக.

பிரத்தியேகமான ரோபோட்களின் தலைப்புக் குறிச்சொற்களை இயக்குதல்

வலைப்பதிவின் பிரத்தியேக ரோபோட்களின் தலைப்புக் குறிச்சொற்களை அமைக்கவும். தேடல் இன்ஜின்களுக்கு வழங்கப்பட்ட ரோபோட்களின் தலைப்புக் குறிச்சொற்களை அமைக்க இந்தக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரோபோட்களின் தலைப்புக் குறிச்சொற்கள் குறித்து மேலும் அறிக.

Google Search Console

Search Consoleலுக்கான இணைப்பு.

லாபம் பெறுதல்

பிரத்தியேக ads.txt அமைப்பை இயக்குதல்

வலைப்பதிவின் பிரத்தியேக ads.txt உள்ளடக்கத்தை அமைக்கலாம். உங்கள் டிஜிட்டல் விளம்பர இருப்புப் பட்டியலின் மறுவிற்பனையாளர்களைக் குறிப்பாகக் கண்டறிந்து அனுமதி வழங்க ads.txt கோப்பு உங்களை அனுமதிக்கும். பிரத்தியேக விளம்பரங்கள் குறித்து மேலும் அறிக.

வலைப்பதிவை நிர்வகித்தல்

உள்ளடக்கத்தை இறக்குதல்

உங்கள் இடுகைகள் மற்றும் கருத்துகளின் .xml கோப்புகளை உங்கள் வலைப்பதிவில் இறக்க முடியும்.

உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுத்தல்

உங்கள் வலைப்பதிவைக் காப்புப் பிரதி எடுக்கும்போது இடுகைகள், கருத்துகள் ஆகியவற்றின் .xml கோப்பைப் பெறுவீர்கள்.

உங்கள் வலைப்பதிவிலுள்ள வீடியோக்கள்

உங்கள் வலைப்பதிவிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்கவோ நீக்கவோ முடியும்.

வலைப்பதிவை அகற்றுதல்

வலைப்பதிவை நீக்கினால் குறுகிய நேரத்திற்குள் மட்டுமே அதை மீட்டெடுக்க முடியும். வலைப்பதிவை நிரந்தரமாக நீக்கினால் உங்கள் வலைப்பதிவின் தகவல்கள், இடுகைகள், பக்கங்கள் ஆகிய அனைத்தும் நீக்கப்படும். அவற்றை மீட்டெடுக்க முடியாது.

முக்கியம்: நீக்கப்பட்ட வலைப்பதிவுகளை அவை நிரந்தரமாக நீக்கப்படுவதற்கு முன்பாக 90 நாட்களுக்குள் மீட்டெடுக்க முடியும். நீங்கள் தற்போது உள்நுழைந்திருக்கும் Google கணக்கைப் பயன்படுத்தி இந்த முகவரியிலேயே மற்றொரு வலைப்பதிவை உருவாக்க முடியும். உங்கள் வலைப்பதிவை நீக்குவதற்கு முன்னர் அதைப் பதிவிறக்க முடியும்.

தள ஊட்டம்

வலைப்பதிவு ஊட்டத்தை அனுமதித்தல்

  • முழுவதும்: உங்கள் இடுகையின் உள்ளடக்கங்கள் அனைத்தையும் வழங்கும்.
  • இடுகையின் சுருக்கம் வரை: உங்கள் இடுகையின் சுருக்கத்திற்கு முன் அனைத்து இடுகை உள்ளடக்கங்களையும் காண்பிக்கும். இடுகையின் சுருக்கங்கள் குறித்து மேலும் அறிக.
  • குறுகியவை: தோராயமாக முதல் 400 எழுத்துகளை வழங்கும்.
  • ஏதுமில்லை: "ஏதுமில்லை" என்பதைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வலைப்பதிவின் XML ஊட்டம் முடக்கப்படும்.
  • பிரத்தியேகமானவை: வலைப்பதிவு இடுகைகள், கருத்து ஊட்டம் அல்லது இடுகை வாரியான கருத்து ஊட்டம் போன்றவற்றிற்கான மேம்பட்ட விருப்பங்களை அமைக்கலாம்.
    • வலைப்பதிவு இடுகை ஊட்டம்
      உங்கள் இடுகையின் உள்ளடக்கத்தில் பகிர விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.
    • வலைப்பதிவுக் கருத்து ஊட்டம்
      உங்கள் கருத்துகளின் உள்ளடக்கத்தில் பகிர விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.
    • இடுகை வாரியான கருத்து ஊட்டங்கள்
      உங்கள் இடுகை வாரியான கருத்துகளின் உள்ளடக்கத்தில் பகிர விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.

இடுகை ஊட்ட ரீடைரெக்ட் URL

உங்கள் இடுகையின் ஊட்டத்தை FeedBurner கொண்டு எழுதியிருந்தாலோ உங்கள் ஊட்டத்தைச் செயலாக்குவதற்கு வேறு சேவையைப் பயன்படுத்தியிருந்தாலோ ஊட்டத்தின் முழு URLலையும் இங்கு உள்ளிடவும். அனைத்து இடுகை ஊட்டங்களையும் இந்த முகவரிக்கு Blogger திசைதிருப்பும். திசைதிருப்ப வேண்டாம் எனில் இதைக் காலியாக விடவும்.

இடுகை ஊட்ட அடிக்குறிப்பு

உங்கள் இடுகை ஊட்டத்தில் உள்ள ஒவ்வொரு இடுகைக்குப் பின்னும் இது காட்டப்படும். நீங்கள் விளம்பரங்களையோ பிற மூன்றாம் தரப்பு ஊட்டச் சேர்க்கைகளையோ பயன்படுத்தினால் அந்தக் குறியீட்டை இங்கே உள்ளிடவும். “வலைப்பதிவு ஊட்டத்தை அனுமதி” என்பதை முழுவதும் என்றும் அமைக்க வேண்டும்.

தலைப்பு & என்க்ளோஷர் இணைப்புகள்

இது இடுகை எடிட்டரில் தலைப்பு இணைப்பு, சேர்க்கை இணைப்பு ஆகிய விருப்பங்களைச் சேர்க்கும்.

  • தலைப்பு இணைப்புகள்: உங்கள் இடுகைத் தலைப்பிற்காகப் பிரத்தியேக URLலை அமைக்க அனுமதிக்கும்.
  • சேர்க்கை இணைப்புகள்: பாட்காஸ்ட்கள், MP3 மற்றும் உங்கள் இடுகைகளில் பிற உள்ளடக்கத்தை RSS, Atom போன்ற ஊட்டங்களில் இயக்கக்கூடியதாக மாற்றப் பயன்படுகின்றன.

பொது

Blogger வரைவைப் பயன்படுத்துதல்

Blogger வரைவு என்பது பீட்டா பதிப்பிலுள்ள Blogger ஆகும். புதிய அம்சங்களை அனைத்து Blogger பயனர்களுக்கும் வெளியிடும் முன் அவற்றைச் சோதித்துப் பார்க்க இதை இயக்கவும்.

பயனர் சுயவிவரம்

உங்கள் சுயவிவரத்தை நிர்வகிக்க, "பயனர் சுயவிவரம்" இணைப்பைக் கிளிக் செய்யவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12195012164410660838
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false