Androidல் Blogger மொபைல் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Blogger மொபைல் ஆப்ஸ் மூலம் வலைப்பதிவு இடுகைகளை இடுகையிடலாம் திருத்தலாம் சேமிக்கலாம் பார்க்கலாம். Android 5.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்டுள்ள எவரும் இந்த ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்யலாம்.

முக்கியமானது: Blogger மொபைல் ஆப்ஸ் மூலம் இடுகையிட, உங்களிடம் ஏற்கெனவே Google கணக்கும் கம்ப்யூட்டரில் உருவாக்கிய வலைப்பதிவும் இருக்க வேண்டும்.

இந்த ஆப்ஸ் மூலம் இடுகைகளை எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். உங்கள் இடுகையை வரைவாகச் சேமித்து பின்னர் கம்ப்யூட்டரில் திருத்தலாம் அல்லது ஆப்ஸிலிருந்து உங்கள் வரைவைக் கம்ப்யூட்டரில் திருத்தலாம். அமைப்புகளையும் தளவமைப்புகளையும் மாற்றவும் உங்கள் புள்ளிவிவரங்களைச் சரிபார்க்கவும் இணையதளத்தில் உள்ள Blogger டாஷ்போர்டைப் பயன்படுத்தலாம். 

ஆப்ஸில் என்ன செய்யலாம்?

உங்கள் Google கணக்கின் மூலம் உள்நுழையும்போது, வெளியிடப்பட்ட மற்றும் வரைவில் உள்ள இடுகைகளைத் தேடலாம் திருத்தலாம் நீக்கலாம். பல்வேறு வலைப்பதிவுகளுக்கு உங்களிடம் நிர்வாகி/ஆசிரியர் அனுமதி இருந்தால் வலைப்பதிவுகளுக்கிடையே மாறலாம். 

மொபைல் ஆப்ஸ் மூலம் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • புதிய இடுகைகளை உருவாக்கலாம் வெளியிடலாம்
  • பின்னர் முடிப்பதற்காக, இடுகைகளை வரைவுகளாகச் சேமிக்கலாம்
  • Android பகிர்தல் அம்சம் மூலம் உங்கள் இடுகைக்கான இணைப்பைப் பகிரலாம்
  • உலாவியில் வலைப்பதிவையோ இடுகையையோ திறக்கலாம்
  • கணக்குகள்/வலைப்பதிவுகளுக்கிடையில் மாறலாம்
  • Blogger உதவி மையத்திற்குச் செல்லலாம் 
  • ஆப்ஸ் சார்ந்த கருத்துக்களை அனுப்பலாம்

இடுகைகளை உருவாக்கலாம் திருத்தலாம் வெளியிடலாம்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Blogger ஆப்ஸைத் Blogger திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் இடுகையை உருவாக்கு Edit என்பதைத் தட்டவும்.
  4. தலைப்பை உள்ளிட்ட பின் இடுகையை வரைவாக உள்ளிடவும்.
    உதவிக்குறிப்பு: உரையைத் தடிமனாக்கவும் சாய்வாக்கவும் அடிக்கோடிடவும் இடுகையில் படங்களைச் சேர்க்கவும் கருவிப்பட்டியைப் பயன்படுத்தலாம். 
  5. உங்கள் இடுகையின் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்க, மேல் வலதுபுறத்தில் புதுப்பி Checkmark என்பதைத் தட்டவும்.
  6. உங்கள் இடுகையை வகைப்படுத்தவும் அது எதைப் பற்றியது என்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் லேபிள்கள் புலத்தில் லேபிளை உள்ளிடவும். 
    உதவிக்குறிப்பு: ஒரே இடுகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லேபிள்களைக் காற்புள்ளியால் பிரித்துச் சேர்க்கலாம்.  
  7. மேல் வலதுபுறத்தில் வெளியிடு Send என்பதைத் தட்டவும்.

உங்கள் இடுகையை வரைவாகச் சேமித்தல்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Blogger ஆப்ஸைத் Blogger திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. புதிய இடுகையை உருவாக்கவும். 
  4. உங்கள் இடுகையை எழுதிவிட்டீர்கள் ஆனால் வெளியிடத் தயாராக இல்லை என்றால், மேல் இடதுபுறத்தில் உள்ள மேலும் More என்பதைத் தட்டவும். 
    • உங்கள் வரைவை நீக்க நிராகரி என்பதைத் தட்டவும்.
    • உங்கள் வரைவைச் சேமிக்க வரைவாகச் சேமி என்பதைத் தட்டவும்.

வலைப்பதிவுகளுக்கிடையே மாறுதல்

ஒரே Google கணக்கைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு வலைப்பதிவுகளுக்கு இடையே மாறலாம்.
  1. Android மொபைல்/டேப்லெட்டில் Blogger ஆப்ஸைத் Blogger திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. மேல்புறத்தில் உங்கள் வலைப்பதிவின் பெயரைத் தட்டவும். 
  4. உங்கள் அனைத்து வலைப்பதிவுகளும் காட்டப்படும் 'கீழ் தோன்றும் பட்டியிலிருந்து' மாற விரும்பும் வலைப்பதிவைத் தட்டலாம். 

உங்கள் வலைப்பதிவு/இடுகையை உலாவி மூலம் பார்த்தல்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Blogger ஆப்ஸைத் Blogger திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. பின்வருபவையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
    • இடுகையைப் பார்க்க: உங்கள் இடுகை அதன் பிறகு மேலும் More அதன் பிறகுஇடுகையைக் காட்டு என்பதைத் தட்டவும்.
    • உங்கள் வலைப்பதிவைப் பார்க்க: உங்கள் சுயவிவரம் Profile அதன் பிறகுவலைப்பதிவைக் காட்டு என்பதைத் தட்டவும்.

இடுகையில் படங்களைச் சேர்த்தல் 

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Blogger ஆப்ஸை Blogger திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. இடுகையைத் திறக்கவும்.
  4. படத்தைச் சேர்க்கவும்: 
    • படம் எடுக்க: கேமரா Cameraஅதன் பிறகுபடம் எடு அதன் பிறகுசரி தேர்வுக்குறி என்பதைத் தட்டவும்.
    • ஏற்கெனவே இருக்கும் படத்தைச் சேர்க்க: படங்கள்  அதன் பிறகு படத்தைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் வலைப்பதிவு இடுகைகளில் உள்ள படங்களுக்கு நீங்கள் லேபிள்களையும் சேர்க்கலாம். 

கணக்குகளுக்கிடையில் மாறுதல்

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Blogger ஆப்ஸை Blogger திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. உங்கள் சுயவிவரத்தைத் Profile தட்டி அதன் பிறகு நீங்கள் மாற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கணக்கைச் சேர்க்க, கணக்கைச் சேர் Add என்பதைத் தட்டி அதன் பிறகு உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.

இணையதளத்தில் மட்டுமே கிடைப்பவை:

உங்கள் இடுகைகளைத் திருத்தவும் வெளியிடவும் மொபைல் ஆப்ஸ் உதவுவதால், சில அம்சங்கள் Blogger டாஷ்போர்டில் மட்டுமே கிடைக்கும். 

இணையதளத்திலிருந்து இவற்றைச் செய்யலாம்:

  • உங்கள் வலைப்பதிவின் தீம் & தளவமைப்பை மாற்றலாம்
  • கருத்துகள், AdSense, பக்கங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கலாம்
  • உங்கள் அமைப்புகளை மாற்றலாம்
  • உங்கள் வலைப்பதிவின் புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12470705868262609481
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false