தளவமைப்புகளுக்கான பக்க உறுப்புகளும் குறிச்சொற்களும்

ஒரு தளவமைப்புத் தீமின் <body> என்ற பிரிவு விட்ஜெட்டுகளாலும் பிரிவுகளாலும் ஆனது.

  • உங்கள் பக்கத்தின் பக்கப்பட்டி, அடிக்குறிப்பு போன்ற பகுதிகளே பிரிவுகளாகும்.
  • பக்கம், பிளாக்ரோல் அல்லது “பக்க உறுப்புகள்” தாவலில் இருந்து சேர்க்கக்கூடியவை போன்ற பக்க உறுப்புகளே விட்ஜெட்டாகும்.

உங்களுக்கு விருப்பமான HTMLலை உங்கள் தீமில் உள்ள பிரிவுகளில் சேர்க்கலாம்.

பிரிவுகள்

உங்கள் தீமில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் தொடக்கக் குறிச்சொல்லும்  முடிவுக் குறிச்சொல்லும் இருக்கும், எடுத்துக்காட்டு:

<b:section id='header' class='header' maxwidgets="1" showaddelement="no">

</b:section>

<b:section> குறிச்சொல்லின் பண்புக்கூறுகள்
  • id – (அவசியம்) எழுத்துகளும் எண்களும் மட்டுமே உள்ள பிரத்தியேகமான பெயர்.
  • class – (விரும்பினால்) “navbar,” “header,” “main,” “sidebar,” “footer” ஆகியவை பொதுவான class பெயர்கள். தீம்களை நீங்கள் பின்னர் மாற்றும் பட்சத்தில் உங்கள் உள்ளடக்கத்தை எப்படி இடமாற்றுவது என்பதைத் தீர்மானிக்க Bloggerருக்கு இந்தப் பெயர்கள் உதவும்.
  • maxwidgets –- (விரும்பினால்) இந்தப் பிரிவில் அனுமதிக்கப்படும் விட்ஜெட்டுகளின் அதிகபட்ச எண்ணிக்கை. நீங்கள் குறிப்பிடாத பட்சத்தில் வரம்பு எதுவும் இருக்காது.
  • showaddelement – (விரும்பினால்) “ஆம்” அல்லது “இல்லை” என்றிருக்கலாம். “ஆம்” என்பது இயல்பு விருப்பமாக இருக்கும். பக்க உறுப்புகள் தாவலானது இந்தப் பிரிவில் 'ஒரு பக்க உறுப்பைச் சேர்' என்ற இணைப்பைக் காட்ட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்.
  • growth – (விரும்பினால்) 'கிடைமட்டம்' அல்லது 'செங்குத்து' என்றிருக்கலாம். 'செங்குத்து' என்பது இயல்பு விருப்பமாக இருக்கும். இது இந்தப் பிரிவில் உள்ள விட்ஜெட்டுகளின் ஒழுங்கமைப்பு அருகருகே இருக்க வேண்டுமா ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்.

ஒரு பிரிவில் விட்ஜெட்டுகள் மட்டுமே இருக்கலாம். ஒரு பிரிவிற்குள் கூடுதல் குறியீட்டைச் செருக அந்தப் பிரிவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும்.

விட்ஜெட்டுகள்

ஒரு விட்ஜெட் ஒற்றைக் குறிச்சொல்லைக் கொண்டு குறிக்கப்படுகிறது. இந்தக் குறிச்சொல், பக்க உறுப்புகள் தாவலில் விட்ஜெட் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதைக் குறிப்பதற்கான ஒதுக்கிடமாகும்.

விட்ஜெட்களுக்கான சில எடுத்துக்காட்டுகள் (ஒன்று பக்க மேற்குறிப்புக்கு மற்றொன்று பட்டியலுக்கு) :

<b:widget id="header" type='HeaderView' locked="yes"/>

<b:widget id="myList" type='ListView' locked="no" title="My Favorite Things"/>

<b:widget id=”BlogArchive1” locked=”false” mobile=”yes” title=”Blog Archive” type=”BlogArchive”/>

விட்ஜெட்டின் பண்புக்கூறுகள்
  • id – (அவசியம்) எழுத்துகளும் எண்களும் மட்டுமே இருக்கலாம். உங்கள் தீமில் உள்ள ஒவ்வொரு விட்ஜெட் ஐடியும் பிரத்தியேகமானதாக இருக்க வேண்டும். விட்ஜெட்டை நீக்கிவிட்டு புதிதாக ஒரு விட்ஜெட்டை உருவாக்கினால் மட்டுமே விட்ஜெட் ஐடியை மாற்ற முடியும்.
  • type – (அவசியம்) இது விட்ஜெட்டின் வகையைக் குறிக்கிறது.
  • locked – (விரும்பினால்) “ஆம்” அல்லது “இல்லை” என்றிருக்கலாம். “இல்லை” என்பது இயல்பு விருப்பமாக இருக்கும். பூட்டப்பட்ட விட்ஜெட்டைப் பக்க உறுப்புகள் தாவலிலிருந்து நகர்த்தவோ நீக்கவோ முடியாது.
  • title – (விரும்பினால்) காட்சித் தலைப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில் “List1” என்பதைப் போன்ற ஒரு இயல்புத் தலைப்பு பயன்படுத்தப்படும்.
  • pageType – (விரும்பினால்) “எல்லாம்,” “காப்பகம்,” “முதன்மை” அல்லது “உருப்படி” என்றிருக்கலாம். “எல்லாம்” என்பது இயல்பு விருப்பமாக இருக்கும். வலைப்பதிவின் குறிப்பிட்ட பக்கங்களில் மட்டுமே விட்ஜெட் காட்டப்படும். (pageType எதுவாக இருப்பினும் அனைத்து விட்ஜெட்டுகளும் பக்க உறுப்புகள் தாவலில் காட்டப்படும்.)
  • mobile – (விரும்பினால்) “ஆம்,” “இல்லை” அல்லது “மட்டும்” என்றிருக்கலாம். “இயல்பு” என்பது இயல்பு விருப்பமாக இருக்கும். இது மொபைலில் விட்ஜெட்டைக் காட்ட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும். mobile பண்புக்கூறு “இயல்பு” என்றிருந்தால் மேற்குறிப்பு, வலைப்பதிவு, சுயவிவரம், PageList, AdSense, பண்புக்கூறு ஆகியவை மட்டுமே மொபைலில் காட்டப்படும்.

விட்ஜெட் குறிச்சொற்களை மாற்றுவது குறித்து மேலும் அறிக.

கவனத்திற்கு: நீங்கள் வெளியிட்ட வலைப்பதிவில் <b:section>, <b:widget> ஆகிய அனைத்துக் குறிச்சொற்களும் குறிப்பிட்ட ஐடியைக் கொண்ட <div> என்ற குறிச்சொற்களைக் கொண்டு மாற்றப்படும். இதனால் உங்கள் CSSஸில் div#header, div#myList போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5200818149949458212
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false