தேடல் இன்ஜின்களில் உங்கள் வலைப்பதிவைக் கண்டறிய பிறருக்கு உதவுங்கள்

Google, Bing போன்ற தேடல் இன்ஜின்களில் உங்கள் வலைப்பதிவைப் பிறர் எளிதாகக் கண்டறிய நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • தேடல் இன்ஜின்களில் உங்கள் வலைப்பதிவைப் பட்டியலிடலாம்.
  • தேடல் முடிவுகளில் உங்கள் தளம் முதன்மையாகக் காட்டப்பட தளம் முழுவதும் தேடல் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.

தேடல் இன்ஜின்களில் உங்கள் வலைப்பதிவைப் பட்டியலிடுதல்

தேடல் இன்ஜின்கள் உங்கள் வலைப்பதிவைக் கண்டறிவதை அனுமதிக்க:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில், பட்டியலிட வேண்டிய வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "தனியுரிமை" என்பதற்குக் கீழ் உள்ள தேடல் இன்ஜின்களால் கண்டறிய முடியும் என்பதை இயக்கவும்.

உங்கள் வலைப்பதிவிற்கான 'தேடலில் மேம்படுத்துதல்' (Search Engine Optimization - SEO) குறித்த உதவிக்குறிப்புகள்

உங்கள் இடுகைகளிலும் பக்கங்களிலும் உள்ள தலைப்புகளிலும் உரைகளிலும் தொடர்புடைய தேடல் குறிப்புகளைப் பயன்படுத்தலாம். தேடல் முடிவுகளில் தோன்றாமல் இருக்கும் வகையில் புறக்கணிக்கக்கூடிய பக்கங்கள், இடுகைகள், இணைப்புகள் ஆகியவற்றைத் தேடல் இன்ஜின்களுக்குத் தெரிவிக்கலாம்.

உங்கள் இடுகை & பக்கத் தலைப்புகளுக்குத் தேடல் குறிப்புகளைச் சேர்த்தல்

தேடல்களில் உங்கள் இடுகைகள் மற்றும் பக்கங்களின் தரவரிசையை மேம்படுத்த:

  • இடுகை/பக்கம் எதைப் பற்றியது என்பதை விளக்குவதற்குத் தேடல் குறிப்புகளைச் சேர்க்கவும்.
  • தலைப்புகளை 60 எழுத்துகளுக்குள் எழுத முயலவும். சிறிய சுருக்கமான தலைப்புகள் அதிகம் படிப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதோடு முழுமையாகவும் காட்டப்படும்.

தலைப்புகளைச் சேர்த்தல்

உங்கள் இடுகை எதைப் பற்றியது என்பதைத் தேடல் இன்ஜின்களுக்குத் தெரிவிக்க H1, H2, H3 போன்ற பல தலைப்புகளைச் சேர்க்கலாம். தலைப்புகளைச் சேர்க்க:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில், தலைப்புகளைச் சேர்க்க விரும்பும் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறம் உள்ள மெனுவில் இடுகைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திருத்த விரும்பும் இடுகையின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  5. தலைப்பாக மாற்ற விரும்பும் உரையை தனிப்படுத்திக் காட்டவும்.
  6. மெனுவில் உள்ள 'பத்தி' Menu என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. நீங்கள் விரும்பும் தலைப்பு வகையைத் தேர்வுசெய்யவும்.

தேடிக் கண்டறியும் வகையில் படங்களை அமைத்தல்

உங்கள் படங்களை அனைத்து வாசகர்களும் தேடுவதற்கும் அணுகுவதற்கும் ஏற்றவாறு அமைக்க, குறுகிய விளக்கத்தையோ மாற்று உரையையோ தலைப்பையோ சேர்க்கலாம்:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  3. உங்கள் இடுகையில் படத்தைச் சேர்த்து அதில் கிளிக் செய்யவும்.
  4. திருத்து Edit என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உரைப் பெட்டியில்: 
    • “மாற்று உரை” பிரிவில்: நீண்ட விளக்கத்தைச் சேர்க்கவும்.
    • “தலைப்பு” பிரிவில்: குறுகிய விளக்கத்தைச் சேர்க்கவும்.
  6. புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

தேடல்களிலிருந்து பக்கங்களை மறைத்தல்

முக்கியம்: தேர்ந்தெடுக்கும் குறிச்சொற்களின் கீழ் வரும் பக்கங்களையும் இடுகைகளையும் நீங்கள் மறைக்கலாம். குறிப்பிட்ட இடுகைகளைத் தடுக்க, "பிரத்தியேகமான ரோபோக்களின் குறிச்சொற்கள்" என்பதற்குக் கீழ் உள்ள இடுகை எடிட்டர் அமைப்புகளில் அட்டவணைப்படுத்த வேண்டாம் என்பதை இயக்கவும்.

குறிப்பிட்ட பக்கங்கள்/இடுகைகளைத் தேடல் இன்ஜின்கள் கண்டறிவதை விரும்பவில்லை எனில் அவற்றை மறைக்கலாம். பக்கங்களை மறைக்க:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  3. இடதுபுறத்திலுள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "Crawlerகளும் அட்டவணைப்படுத்தலும்" என்பதற்குக் கீழ் உள்ள பிரத்தியேகமான ரோபோக்களின் தலைப்புக் குறிச்சொற்களை இயக்கு என்பதை இயக்கவும்.
  5. முகப்புப் பக்கத்திற்கான குறிச்சொற்கள், காப்பகம் & தேடல் பக்கக் குறிச்சொற்கள் அல்லது இடுகை & பக்கக் குறிச்சொற்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பிட்ட இணைப்புகளைத் தொடர வேண்டாம் எனத் தேடல் இன்ஜின்களுக்குத் தெரிவித்தல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  3. இடதுபுறம் உள்ள மெனுவில் இடுகைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மறைக்க விரும்பும் இடுகையைக் கிளிக் செய்யவும்.
  5. மேல்புறத்தில் உள்ள 'இணைப்பு' இணைப்பைச் செருகுதல் அதன் பிறகு URLலை உருவாக்கு/திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. ‘rel=nofollow’ பண்புக்கூற்றைச் சேர் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
  7. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் URLலை மாற்றுதல்/திசைதிருப்புதல்

உங்கள் URLகளைத் திரும்ப எழுதுதல்

அதிகம் படிப்பதற்கு ஏற்ற வகையில் உங்கள் இடுகைகளை அமைப்பதற்கும் அவை எதைப் பற்றியது எனத் தேடல் இன்ஜின்கள் புரிந்துகொள்ள உதவும் வகையிலும் அவற்றின் URLலை மாற்றியமைக்கலாம். அதைச் செய்ய: 

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில், புதுப்பிப்பதற்கான வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் இடுகைகள் அதன் பிறகு புதிய இடுகை New post என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வலதுபுறத்தில் உள்ள "இடுகை அமைப்புகள்" என்பதற்குக் கீழ் நிரந்தர இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பிரத்தியேகமான நிரந்தர இணைப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் URLலை உள்ளிடவும்.
  6. வெளியிடு அல்லது சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

URLலுக்கான திசைதிருப்புதலை உருவாக்குதல்

புதிய இடுகைகளுக்கோ பக்கங்களுக்கோ உங்கள் வலைப்பதிவிலிருந்து URLகளைத் திசைதிருப்புவதற்கு:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "பிழைகளும் திசைதிருப்புதல்களும்" என்பதற்குக் கீழ் உள்ள பிரத்தியேகமான திசைதிருப்புதல்கள் அதன் பிறகு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நீக்கப்பட்ட URLலையும் திசைதிருப்ப விரும்பும் URLலையும் சேர்க்கவும். 
    • அசல் கட்டுரை நீக்கப்பட்டிருந்தால் நிரந்தரமானது என்பதை இயக்கவும்.
  6. சரி அதன் பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11567590497331464395
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false