இடுகையை உருவாக்குதல், திருத்துதல், நிர்வகித்தல் அல்லது நீக்குதல்

நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடுகைகளையும் வரைவுகளையும் எழுதலாம் திருத்தலாம் அல்லது நீக்கலாம்.

புதிய இடுகையை எழுதுதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. புதிய இடுகை New post என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடுகையை உருவாக்கவும்.
    • வெளியிடப்பட்ட பின்னர் உங்கள் இடுகை எப்படித் தோன்றும் என்பதைப் பார்க்க, மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் இடுகையைச் சேமிக்க/வெளியிட:
    • வெளியிடாமல் சேமிப்பதற்கு: சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • வெளியிடுவதற்கு: வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் இடுகையில் லேபிள்களைச் சேர்த்தல்

லேபிள்களைப் பயன்படுத்தி உங்கள் இடுகைகளை ஒழுங்கமைக்கலாம். வாசகர்கள் தாங்கள் பெறும் உள்ளடக்கத்தை வடிகட்ட உங்கள் லேபிள்களைப் பயன்படுத்தலாம்.

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. எடிட்டர் காட்சியைத் திறக்க ஏற்கெனவே உள்ள ஓர் இடுகையைக் கிளிக் செய்யவும் அல்லது 'புதிய இடுகை' New post என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள 'லேபிள்கள்' Label என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஒரு லேபிளை உள்ளிடவும் அல்லது ஏற்கெனவே உள்ள ஒரு லேபிளைக் கிளிக் செய்யவும்.
    • ஓர் இடுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட லேபிள்களைச் சேர்க்க, காற்புள்ளிகளைப் பயன்படுத்தி லேபிள்களைப் பிரிக்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் டாஷ்போர்டில் தலைப்பிற்கு அடுத்து லேபிள்களைக் கண்டறியலாம்.

உங்கள் இடுகைகளை லேபிள்கள் மூலம் வடிகட்டுதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள 'லேபிள்கள்' Label என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விரும்பும் லேபிள்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

இடுகையை வெளியிடுதல்

இடுகையைத் திட்டமிடுதல்
  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. வலைப்பதிவின் பெயரின் கீழ் 'இடுகைகள்' Posts என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு நீங்கள் வெளியிட விரும்பும் இடுகையின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. வலதுபுற பக்கப்பட்டியில் 'வெளியிட்ட தேதி' Published on என்பதற்கு அடுத்துள்ள கீழ் தோன்றுதல் அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  4. தேதியையும் நேரத்தையும் அமை என்பதைத் தேர்வுசெய்யவும்.
  5. கேலெண்டரில் தேதியையும் நேரத்தையும் தேர்வுசெய்து வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஏற்கெனவே வெளியிட்ட இடுகையை மீண்டும் திட்டமிட விரும்பினால் வரைவாக மாற்றியமை என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் நேர மண்டலத்தை அமைக்க:

  1. பிரதான டாஷ்போர்டின் இடதுபுற மெனுவில் அமைப்புகள் Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “வடிவமைத்தல்” பிரிவுக்குச் சென்று நேர மண்டலம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பாப்-அப் சாளரத்தில் நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் வலைப்பதிவில் இடுகையிட மின்னஞ்சலைப் பயன்படுத்துதல்

மின்னஞ்சலை உருவாக்குவதற்கு:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  4. பிரதான டாஷ்போர்டின் இடதுபுற மெனுவில் அமைப்புகள் Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. “மின்னஞ்சல்” பிரிவிற்குச் சென்று மின்னஞ்சல் மூலம் இடுகையிடுதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. பாப்-அப் சாளரத்தில் மின்னஞ்சலை உடனடியாக வெளியிடு அல்லது மின்னஞ்சல்களை வரைவு இடுகைகளாகச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. “இடுகையிடுவதற்கான மின்னஞ்சல்” என்பதன் கீழ் இடுகைகளுக்குப் பயன்படுத்துவதற்கான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மின்னஞ்சல் மூலம் இடுகையிடுவதற்கு:

Important: Anyone who emails this unique email address will be able to post on your blog, as you.

  1. புதிய மின்னஞ்சலை உருவாக்கவும்.
  2. மின்னஞ்சலின் தலைப்பில் உங்கள் இடுகையின் தலைப்பைக் குறிப்பிடவும்.
  3. மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் உங்கள் இடுகையை உள்ளிடவும்.
    • உங்கள் இடுகையின் முடிவினைக் குறிக்க #end என உள்ளிடவும்.
    • படத்தைச் சேர்க்க உங்கள் மின்னஞ்சலில் படத்தை இணைக்கவும்.
  4. நீங்கள் உருவாக்கிய மின்னஞ்சல் முகவரிக்கு (username.[secretword]@blogger.com) இந்த மின்னஞ்சலை அனுப்பவும்.

இடுகையைத் திருத்துதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. ஒரு வலைப்பதிவின் கீழ் இடுகைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடுகையின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. விரும்பிய மாற்றங்களைச் செய்யவும்.
    • வெளியிடப்பட்ட பின்னர் உங்கள் இடுகை எப்படித் தோன்றும் என்பதைப் பார்க்க, மாதிரிக்காட்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பின்வரும் வகையான இடுகைகளுக்கு:
    • வெளியிடப்பட்டவை: புதுப்பி அல்லது வரைவாக மாற்றியமை என்பதைக் கிளிக் செய்யவும்.
    • வெளியிடப்படாதவை: வெளியிடு அல்லது சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இடுகையை நீக்குதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  4. நீக்க விரும்பும் இடுகையைச் சுட்டிக்காட்டவும். அது தோன்றும்போது 'நீக்கு' Delete என்பதைக் கிளிக் செய்யவும்.

இடுகையை வடிவமைத்தல்

“மேலும் காட்டு” இணைப்பைச் சேர்த்தல்
உங்கள் வலைப்பதிவின் பொருளடக்கப் பக்கத்தில், வாசகர்கள் ஓர் இடுகையின் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம் பின்னர் "மேலும் காட்டு" இணைப்பைக் கிளிக் செய்து இடுகையை முழுமையாகப் பார்க்கலாம்.
  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  4. இணைப்பைச் சேர்க்க விரும்பும் இடுகையைக் கிளிக் செய்யவும்.
  5. எழுதுபெட்டியில், "மேலும் காட்டு" இணைப்பைச் சேர்க்க விரும்பும் இடத்தில் கிளிக் செய்யவும்.
  6. இடுகையின் சுருக்கத்தைச் செருகு Insert jump break என்பதைக் கிளிக் செய்யவும்.
இடுகை டெம்ப்ளேட்டை உருவாக்குதல்
  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. வலைப்பதிவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  4. இடதுபுற மெனுவில் 'அமைப்புகள்' Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. “இடுகைகள்” பிரிவில் இடுகை டெம்ப்ளேட் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் டெம்ப்ளேட்டைச் சேர்க்கவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துதல்

Windows & Linux

செயல் ஷார்ட்கட்
தடிமன், சாய்வு, அடிக்கோடு ஆகிய வடிவமைப்புகளுக்கு உரையை மாற்றுவது Ctrl + b, Ctrl + i, Ctrl + u
வடிவமைப்பை அகற்றுவது Ctrl + Space
இணைப்பைச் செருகுவதற்கான இடத்தைத் திறப்பது Ctrl + k
செயல்தவிர்ப்பது Ctrl + z, Ctrl + Shift + z
மீண்டும்செய்வது Ctrl + y

Mac

செயல் ஷார்ட்கட்
தடிமன், சாய்வு, அடிக்கோடு ஆகிய வடிவமைப்புகளுக்கு உரையை மாற்றுவது + b, ⌘ + i, ⌘ + u
இணைப்பைச் செருகுவதற்கான இடத்தைத் திறப்பது + k
செயல்தவிர்ப்பது + z, ⌘ + Shift + z
மீண்டும்செய்வது + y

தவிர்க்க வேண்டிய உள்ளடக்கம்

இவற்றைப் பயன்படுத்தாதீர்:

  • வேறொருவர் ஹோஸ்ட் செய்தவற்றை அவருடைய ஒப்புதலின்றி பயன்படுத்துதல்.
  • பதிப்புரிமை கொண்டவை.
  • எங்கள் உள்ளடக்கக் கொள்கையை மீறும் உள்ளடக்கம். சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் இடுகையிடப்படும் வெளிப்படையான பாலியல் படமும் வெறுப்பைத் தூண்டும், வன்முறையான, பண்பற்ற உள்ளடக்கமும் இதில் அடங்கும் (ஆனால் இவை மட்டுமல்ல).
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
542747374897659851
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false