பிரத்தியேக டொமைனை அமைத்தல்

முக்கியம்: உங்கள் பிரத்தியேக டொமைனில் CAA ரெக்கார்டுகளைப் பயன்படுத்தினால், letsencrypt.orgக்கான ரெக்கார்டைச் சேர்க்கவும், இல்லையெனில் Blogger உங்கள் SSL சான்றிதழை உருவாக்காது அல்லது புதுப்பிக்காது. 

டொமைனை வாங்கும்போது உங்கள் வலைப்பதிவின் இணையதள முகவரியைப் பிரத்தியேகமாக்கலாம்.

உங்கள் வலைப்பதிவுடன் டொமைனை அமைத்தல்

டொமைன் வழங்குநரிடமிருந்து நீங்கள் டொமைனை வாங்கும்போது Bloggerரில் உங்கள் டொமைனை அமைக்கலாம் நிர்வகிக்கலாம்.

 Important: It may take up to 24 hours for your “blogspot.com” address to redirect you to your custom domain.

Bloggerரில் உங்கள் டொமைனை அமைத்தல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள ஒரு வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுற மெனுவில் உள்ள, அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “வெளியிடுதல்” என்பதற்குக் கீழே உள்ள, பிரத்தியேக டொமைன் என்பதைக் கிளிக் செய்யவும்.
    1. நீங்கள் வாங்கிய டொமைனின் URLலை டைப் செய்யவும்.
    2. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. 2 CNAMEகளுடன் பிழைச் செய்தி காட்டப்பட்டால்:
    • வலைப்பதிவு CNAME: பெயர் என்பதற்கு, துணை டொமைனாகப் பெயரை டைப் செய்யவும். உதாரணமாக, "blog." அல்லது "www." சேருமிடம் என்பதற்கு, “ghs.google.com” என்று டைப் செய்யவும்.
    • பாதுகாப்பு CNAME: “பெயர்: XXX, சேருமிடம்: XXX.” இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுவதுடன், உங்கள் வலைப்பதிவிற்கும் Google கணக்கிற்கும் தனிப்பட்டதாக இருக்கும்.

உங்களின் டொமைன் வழங்குநர் அமைப்புகளை அமைத்தல்

  1. உங்கள் டொமைன் வழங்குநரின் இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. கட்டுப்பாட்டுப் பலகத்தில் டொமைன் பெயர் சிஸ்டத்தை (DNS) கண்டறியவும்.
    1. "பெயர், லேபிள் அல்லது ஹோஸ்ட்" என்பதற்குக் கீழே, மேலே 5வது படியில் நீங்கள் வழங்கிய துணை டொமைனை டைப் செய்யவும்.
    2. "சேருமிடம், இலக்கு அல்லது புள்ளிகள்" என்பதற்குக் கீழே "ghs.google.com" என டைப் செய்யவும்.
  3. உங்கள் வலைப்பதிவிற்கும் Google கணக்கிற்கும் தனிப்பட்டதாக இருக்கும், இரண்டாவது CNAME பற்றிய விவரங்களை உள்ளிடவும்.
  4. உங்கள் DNS அமைப்புகளைச் செயல்படுத்த, குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருக்கவும்.
  5. Bloggerரில் உங்கள் டொமைனை அமைப்பதற்கான வழிமுறையை மீண்டும் பின்பற்றவும்.

உங்கள் வலைப்பதிவின் URLலுக்கான துணை டொமைன் இல்லாமல் URLலை ரீடைரெக்ட் செய்தல்

வாசகர்களை “mydomain.com” என்பதில் இருந்து “www.mydomain.com” என்பதற்குத் திசைதிருப்ப, முன்னொட்டு இல்லாத இணையதள முகவரிக்குத் திசைதிருப்புதலை அமைக்கவும்:

  1. உங்கள் டொமைன் வழங்குநரின் இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. DNS அமைப்புகளைத் திறக்கவும்.
  3. Google IPகளைச் சுட்டிக்காட்டும் இந்த 4 A ரெக்கார்டுகளைச் சேர்க்கவும். "mydomain.com" தளத்திற்கான A ரெக்கார்டுகள் ஏற்கெனவே இருந்தால் அவற்றை நீங்கள் அகற்ற வேண்டும்.
    • 216.239.32.21
    • 216.239.34.21
    • 216.239.36.21
    • 216.239.38.21
  4. Bloggerரில் உள்நுழையவும்.
  5. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. "வெளியிடுதல்" என்பதன் கீழ் உள்ள டொமைனைத் திசைதிருப்பு (mydomain.com என்பதில் இருந்து www.mydomain.com என்பதற்கு) என்பதை இயக்கவும்.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

சிக்கல்கள் இருந்தால் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய சில படிகள் இதோ.

  • உங்கள் டொமைனை அமைக்கும்போது இரண்டு CNAMEகளை உள்ளிடுவதற்கான தேவை இருந்திருக்காது.
  • "பெயர், லேபிள் அல்லது ஹோஸ்ட்" CNAME சரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உங்கள் பிரத்தியேக டொமைன் செயல்படாவிட்டால், படிகளை மீண்டும் செய்து பார்க்கும் முன்னர் காத்திருக்கவும். சிக்கல்கள் இருந்தால் உங்கள் டொமைன் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9114192931695038769
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false